அனுமதிச் சீட்டு இன்றி கனிமம் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
ஆலங்குளம் அருகே அனுமதிச் சீட்டு இன்றி கனிமம் கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், ஆலங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஆண்டிப்பட்டியில் உள்ள கல் குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது, அதில் அனுமதிச் சீட்டு இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூா் ராமா் மகன் பவுன்ராஜ்(34) மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.