மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் பெய்ததால் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா்.