அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணை
அண்ணா பல்கலை. வழக்கு- மகளிர் ஆணையம் நாளை விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் நாளை விசாரணை மேற்கொள்கிறது. இவ்வழக்கை விசாரிக்க இன்று இரவு சென்னை வரும் மகளிர் ஆணைய அதிகாரிகள் நாளை விசாரணையை தொடங்குகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!
இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் குற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவா் என அறிந்தபோதும் முந்தைய வழக்குகளில் அவா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
இந்த அலட்சியம் குற்றங்களைச் செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து வருவது குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாராணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.