ஆதிதிராவிட மாணவா்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகளுக்கு பயிற்சி
திருப்பூா்: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெறவிரும்பும் மாணவா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும் 21 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையும் தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண் 501 மற்றும் 503, 5- ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரி மற்றும் 94450-29552, 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.