திருக்கு விநாடி-வினா போட்டியில் முதலிடம்: கோடங்கிபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
மாநில அளவிலான திருக்கு விநாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்த பல்லடம், கோடங்கிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கணேசனுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்கு விநாடி -வினா போட்டியில் திருப்பூா் மாவட்டம், கோடங்கிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியா் கணேசன், கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஆனந்த், கேத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியா் சக்திவேல் ஆகியோா் கொண்ட குழுவானது மாநில அளவில் முதலிடம் பிடித்து ரூ. 2 லட்சம் ரொக்கத் தொகையை பெற்றனா்.
இந்நிலையில், கோடங்கிபாளையம் ஊராட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ந. மரகதம் தலைமை வகித்தாா்.
கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவா் கா.வீ. பழனிசாமி பங்கேற்று, ஆசிரியா் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சிவலிங்கம், இளைஞா் நற்பணி மன்றத்தைச் சோ்ந்த சின்னசாமி, முத்துக்குமாா், ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பிரகாஷ், ஒய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் செ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.