சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
கர்நாடகத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் பிரியாங்க் கார்கே பதவி விலக வேண்டுமென பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவர் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், தற்கொலைக்கு முன்னதாக தற்கொலைக் குறிப்பையும் விட்டுச் சென்றார். அதில் அவர் கூறியதாவது, “அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு நெருக்கமான ராஜு காபனூருக்கும் எனக்கும் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுப்பதில் போட்டி ஏற்பட்டது.
ஒப்பந்தத் திட்டங்களை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜு காபனூர் என்னிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்து விட்டார். மேலும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதால், தற்கொலை முடிவை எடுத்துள்ளேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் கார்கேவுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், பிரியாங்க் கார்கே பதவி விலகி வேண்டுமெனக் கூறிவரும் நிலையில், சனிக்கிழமையில் அவரது வீட்டையும் முற்றுகையிட்டனர்.
இருப்பினும், பாஜகவினரின் போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்ததால், கார்கேவின் வீட்டின்முன் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தும் பாஜகவினருக்கு வழங்குவதற்காக இளநீர், தேநீர், குடிநீர் முதலானவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கார்கே ஆதரவாளர் தெரிவித்தார்.