Game Changer: படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களின் பட்ஜெட் 75 கோடி! - `ஷாக்'கான ராம் சரண்!
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இத்திரைப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50-வது படம். பிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பாடல்களின் படப்பிடிப்பிற்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவானதாக தகவல்கள் வெளியானது. அது குறித்து தற்போது அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு சொன்ன தகவல்களைக் கேட்டு நடிகர் ராம் சரணும் ஷாக்கான ரியாக்ஷனை வெளிக்காட்டினார்.
அவர், ``படத்தில் மொத்தமாக ஐந்து பாடல்கள் இருக்கிறது. அந்த ஐந்துப் பாடல்களுக்கான மொத்த பட்ஜெட் 75 கோடி. ஒவ்வொரு பாடல்களின் படப்பிடிப்பும் 10, 12 நாள்கள் நடைபெற்றது. பாடல்களுக்கான ரிஹர்சலும் வித்தியாசமாக நடைபெற்றது. ஷங்கர் சார் ஒவ்வொரு பாடலையும் சரியாக டிசைன் செய்வார். படத்தில் வரும் ஒரு மெலடி பாடலை நியூசிலாந்தில் படம் பிடித்தோம். அதில் ஒரு புதிய முயற்சியையும் அவர் எடுத்திருக்கிறார்.
இதில் எதுவும் சவால்கள் இல்லை. இத்திரைப்படம் என்னுடைய 50-வது திரைப்படம். இதில் சில ஸ்பெஷலான விஷயங்கள் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஷங்கர் சார் பிரமாண்டமாக ஒரு விஷயத்தை செய்வார், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் எண்ணினேன். இத்திரைப்படம் உருவாக 3.5 வருடங்கள் எடுத்துக் கொண்டது." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...