உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!
Game Changer: "இது சங்கராந்தி அல்ல; ராம் சரணின் 'ராம் நவமி'" - இயக்குநர் ஷங்கர் புகழாரம்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குநர், சங்கர், ராம் சரண், தயாரிப்பாளர் தில்ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ராஜமெளலி இதன் ட்ரெய்லரை வெளியிட்டு, "பிரமாண்டத்தின் ஒரிஜினல் கேங்ஸ்டர் (OG) ஷங்கர்தான்" என்று பெருமிதத்துடன் பேசியிருந்தார்.
இவ்விழாவில், 'கேம் ஜேஞ்சர்' குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் ஷங்கர், "புதுமை, பிரமாண்டம், ஆக்ஷன் திரில்லர் என என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அவையெல்லாம் இப்படத்தில் இருக்கிறது. அரசு அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் போர்தான் இப்படம். ராம் சரண் கதாபாத்திரத்துக்கு ஒரு பெரிய பேக் ஸ்டோரி இருக்கிறது. இண்டர்வெல் சமயத்தில் அது பெரிய தாக்கத்தைக் கொடுக்கும். படம் முடியும்போதும் பெரிய தாக்கம் இருக்கும்.
ராம் சரண் அதை ரொம்ப சிறப்ப செய்திருக்கிறார். இயக்குநர் என்ன கேட்டாலும் அதைச் செய்பவர். இந்தப் படம் சங்கராந்தி எனச் சொல்கிறார்கள். இது ராம் சரணின் 'ராம் நவமி'.
கியாரா அத்வானி சிறப்பாக, அழகாக நடித்திருக்கிறார். ராம் சரணுடன் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். டான்ஸ் ஆடியிருக்கிறார். அஞ்சலி ரொம்ப நல்ல நடிகை. சோல் ஃபுல்லாக நடிக்கிறார். அந்தக் கதாபாத்திராத்தில ஒரு சர்ப்ரைஸ் ட்விஸ்ட் இருக்கிறது. எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். அவரைப் போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. படக்குழு எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது" என்று பேசியிருக்கிறார்.
Vikatan Audio Book
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...