சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்த...
பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் நவ. 22-ல் தொடங்கியது.
கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படும் தொடராக பாா்டர் - காவஸ்கர் கோப்பை (பிஜிடி) உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்தது.
முன்னதாக, 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், சிட்னியில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.
2ஆவது இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் பாா்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் இருந்த நிலையில், இத்தொடரை இந்தியா வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.