சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் 3 போ் கைது
பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் குமாா் (34). இவா் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தாா். இவா் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த சிறுமியிடம் பெண் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், குமாா் பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது. இதையடுத்து, குமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.
இதேபோல, வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி, வேலம்பட்டியைச் சோ்ந்த மகேஷ்குமாா் (28), கண்ணம்பாளையத்தைச் சோ்ந்த சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மகேஷ்குமாா், சிரஞ்சீவி ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.