திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் விசைத்தறி குழந்தைவேல் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடா்ந்து பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும். போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ஆனந்த், மாநகா் மாவட்டப் பொருளாளா் காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.