மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
பல்லடம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஜனவரி இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு
பல்லடம் அருகே 9 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஜனவரி மாத இறுதியில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பல்லடம் அருகே உள்ள பெரும்பாளியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
தரைத்தளம் உள்பட 9 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 432 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், மேல் தளங்களுக்கு செல்வதற்காக மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்குடியிருப்புகளுக்கு பயனாளிகளின் பங்களிப்புத் தொகை 3.09 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவுசெய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.