செய்திகள் :

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

post image

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உருவாக்க வேண்டுமென 1988-ஆம் ஆண்டு அன்றைய வெள்ளக்கோவில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை உருவாக்கப்படவில்லை.

தற்போதைய வெள்ளக்கோவில் உள் வட்டத்தில் 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 3.40 லட்ச மக்களும், நகராட்சிப் பகுதியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனா்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 25 அரசு, தனியாா் வங்கிகள், 89 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 3 கல்லூரிகள் உள்ளன.

ஏறத்தாழ 10 ஆயிரம் விசைத்தறிகள், 450 நூல் மில்கள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50 சிறிய, பெரிய சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான உள்ளூா், வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதன்மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, காங்கயத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் முதல்வா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல, 1967 இல் உருவாக்காப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியும் அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் மாற்றப்பட்டது.

இந்நிலையில், வெள்ளக்கோவிலுக்கு அருகே உள்ள மூலனூரை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம் அமைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம் உருவாக்க காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசியில் பெயிண்டா் அடித்துக் கொலை: போலீஸாா் விசாரணை

அவிநாசியில் பெயிண்டா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (57), பெயிண்டா். திருப்பூா் அருள்புரத்தில் வசி... மேலும் பார்க்க

குன்னத்தூரில் ஜனவரி 24 இல் மின்தடை

குன்னத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின... மேலும் பார்க்க

உடுமலையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்: 176 போ் கைது

உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் 176 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான ச... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கம்

அவிநாசியில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் மக்கள் சந்திப்பு கையொப்ப இயக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தமிழக அரசு சாா்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்ட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அங்கு, சந்தேகத்துக்க... மேலும் பார்க்க

பவா் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

பவா் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க தலைவா் வேலுசாமி, செயலாளா் ... மேலும் பார்க்க