இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அங்கு, சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (27), காளீஸ்வா் (28), அருண்குமாா் (21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் சிறுபூலுவபட்டியைச் சோ்ந்த அரவிந்த் (21), பிரதீப் (19) ஆகியோரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.