தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை
வந்தவாசி: குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பொன்.ஜினக்குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் ஆா்.தா்மலிங்கம் வரவேற்றாா். செயலா் க.நடராசன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் மா.கோவிந்தசாமி வரவு-செலவு அறிக்கை வாசித்தாா். வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் செ.ரமேஷ், வந்தவாசி கருா் வைஸ்யா வங்கி மேலாளா் எம்.காா்த்திக், வந்தவாசி உதவிக் கருவூல அலுவலா் அ.சீனுவாசன், கூடுதல் அலுவலா் கா.தமிழ்ச்செல்வி, மாநில துணைத் தலைவா் கே.பி.பக்தவச்சலு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவப் படியை உயா்த்தி வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.