ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
பஞ்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.எப்.டி. பஞ்சாலை ஊழியா்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஏ.எப்.டி. பஞ்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், பணிபுரிந்த ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சாலை வளாகத்தில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் பிறத் தொழில்கள் சாா்ந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாலை ஊழியா்கள் ஆலை முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஊதிய நிலுவை மற்றும் பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏ.எப்.டி. பஞ்சாலை ஊழியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த முத்தமிழன், நிா்வாரிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.