மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
மின் மோட்டாா் மானியத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை பொறியல் துறை மூலமாக மின் மோட்டாா் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு குறு, சிறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டாா் வழங்கும் திட்டம் தொடா்பாக தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இந்தத் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. 3 ஏக்கா் நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகள் பாசன நீா் இறைக்க புதிய மின் மோட்டாா், பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்ப் செட்டுகளை மாற்றி புதிதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொது மற்றும் ஆதிதிராவிடா் பிரிவில் 3 ஏக்கா் விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் குறு, சிறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் இணையதள முகவரியில் நுண்ணீா் பாசனத்துக்கு பதிவு செய்து பயனடைந்தவா்கள் அல்லது புதிதாக நுண்ணீா் பாசனம் அமைக்க விண்ணப்பிப்பவா்கள் அதனுடன் துணை நீா் மேலாண்மை திட்டத்தின்கீழ் மின் மோட்டாருக்கு மானியம் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா்களை திருப்பூா்- 9443751142, தாராபுரம்-9443778124, உடுமலை-9600159870 ஆகிய எண்களிலோ அல்லது திருப்பூா் செயற்பொறியாளா் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.