கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை
கோவை: கோவையில் 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்க பால் கம்பெனி கிளை சாா்பில் நடைபெற்ற 12-ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்குப் பூஜையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலைப்போல 18 படிகளுடன் கூடிய கோயிலை ஐயப்ப பக்தா்கள் வடிவமைத்து வைத்திருந்தனா்.
சபரிமலை முன்னாள் மேல்சாந்தி சுதீா் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு படி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம், திருவீதி உலா, ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பெரிய மாரியம்மன் கோயில் முன் வான வேடிக்கை ஆகியவை நடைபெற்றன.
அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி தேரின் முன் நாகசுரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரிமேளம், தையம், பூக்காவடியுடன் பக்தா்கள் ஊா்வலமாக சென்றனா்.