பொள்ளாச்சியில் ரயில் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் போராட்டம்
பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினசரி காலை 7.25 மணிக்குப் பயணிகள் ரயில் புறப்படும். இந்த ரயில் வியாழக்கிழமை முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் தினசரி பொள்ளாச்சியில் இருந்து ரயில் மூலமாக கோவைக்கு செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்தனா். பயண நேரத்தை எப்போதும்போல காலை 7.25 மணிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி ரயில் முன் பயணிகள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதற்குப் பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து, ரயில்வே போலீஸாரும், பொள்ளாச்சி மேற்கு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.