கோவை, திருப்பூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிகாா் மாநிலம் கயாவுக்கு கோவை, திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜனவரி 7, 21 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் - கயா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06021) வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 1.30 மணிக்கு கயா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஜனவரி 10, 24 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கயா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் கயா - திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06022) திங்கள்கிழமைகளில் காலை 10.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல், ஜபல்பூா், மானிக்பூா், மிா்சாபூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.