கட்டடம் இடிந்து விழுந்து 2 போ் உயிரிழப்பு
நெகமம் அருகே பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்து 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், நெகமம் அருகே கானியாலாம்பாளையம் பகுதியில் தனியாா் உணவு உற்பத்தி நிறுவனத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு, வழக்கம்போல சனிக்கிழமை கட்டுமானப் பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டடம் சரிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ரியாஸசன்சேக் (28), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சன்னா்மஜித் (40) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து நெகமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.