புத்தகக்காட்சியில் புதியவை: இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்!
மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை
தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் மகள் தன்யா (20). இவா், கோவை சுங்கம் பாரி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், மருத்துவமனையின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா். இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.