கோவையில் 6 பேருக்கு டெங்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பிற்காக 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா வியாழக்கிழமை கூறியதாவது:
கோவையில் தற்போது மழைப் பொழிவு இல்லாததால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் தொடா் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவா்களுக்கு தற்போது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகள் பிறந்துள் ளனா் என்றாா்.