WTC Finals: தோல்வி எதிரொலி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்த இந்தியா
வேளாண் பல்கலை.யில் ஜன.6 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) காளான் வளா்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
பல்கலைக்கழகத்தின் பயிா் நோயியல் துறை சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் இந்த ஒரு நாள் பயிற்சியில் ரூ.590 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புபவா்கள் பயிா் நோயியில் துறையை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0422 - 6611336, 6611226 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.