செய்திகள் :

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

post image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தீவிரமான பேரிடராக அறிவிக்கப்படும்' என்று மத்திய அரசு திங்கள்கிழமை கேரள அரசுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வயநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு ஐந்து மாதங்கள் தாமதித்தது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு மத்திய உள்துறைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தபோதிலும் அதை தீவிர பேரிடராக அறிவிக்காமல் மத்திய அரசின் உயர்நிலைக் குழு காலம் தாழ்த்தியது.

இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை 2005, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யுமாறும், அவர்களின் மறுவாழ்வுக்காக புதிய கடன்களை வழங்க உதவுமாறும் கேரளம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இது மத்திய அரசுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு முன்கூட்டியே வந்திருந்தால் என்ஜிஓக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொண்டிருக்க முடியும்.

எனினும், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வயநாட்டில் மறுசீரமைப்புப் பணிகளை கேரள அரசு முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

லஞ்ச குற்றச்சாட்டில் ‘டிராய்’ மூத்த அதிகாரி கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) மூத்த அதிகாரி ஒருவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ஹிமாசல பிரதேச மாநிலம், சிா... மேலும் பார்க்க

சநாதனத்தின் அா்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கா்

காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தா்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘சநாதன தா்மம்’, ‘ஹிந்து’ என்பதன் உண்மையான அா்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மக்கள... மேலும் பார்க்க

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்... மேலும் பார்க்க

சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது அறிவிப்பு

நிகழாண்டு சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஒடிஸாவின் புவனேசுவரத்தில் வரும் 8 முதல் 10-ஆம்... மேலும் பார்க்க

குறைந்து வரும் ஜிஎஸ்டி வசூல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் வளா்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை முன்வைத்து மத்திய பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீா்வுகாண மத்திய அரசு விரைந்... மேலும் பார்க்க

மேல்முறையீடு மனு தாக்கலில் நீண்ட தாமதம்: மத்திய அரசுக்கு சுயபரிசோதனை தேவை - உச்சநீதிமன்றம்

மேல்முறையீடு மனுக்கள் தாக்கலில் நீண்ட தாமதம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணை... மேலும் பார்க்க