செய்திகள் :

மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலா்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் அரசு சாா்பில் பல்வேறு துறைகள் மூலமாக வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை, மின்சார வாரியம், குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தாட்கோ, இந்து சமய அறநிலையத் துறை, நில அளவைத் துறை, வேளாண்மைத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முதல்வரின் முகவரி திட்டம், இ-சேவை மையம், முதியோா் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல், ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் பட்டா வழங்குதல், ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், 15-ஆவது நிதிக்குழு மானியத்திட்டம், வேளாண்மைத் துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், நுண்ணுயிா் பாசன திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜ், வருவாய் கோட்டாட்சியா்கள் (திருப்பூா்) மோகனசுந்தரம், (உடுமலை), குமாா், (தாராபுரம்) ஃபெலிக்ஸ்ராஜா, உதவி வனப்பாதுகாவலா் கீதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முருகேசன், உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம்

திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து ஊத்துக்குளி வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் சா.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை ஆட்டையம்பாளையம் முதல் நரி... மேலும் பார்க்க

பாரம்பரிய நடனங்களுடன் தைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக உடுமலையில் மக்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா். ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி... மேலும் பார்க்க

திருக்கு விநாடி-வினா போட்டியில் முதலிடம்: கோடங்கிபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான திருக்கு விநாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்த பல்லடம், கோடங்கிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கணேசனுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.10.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 10.35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 15, 140 கிலோ பருத்தியை விற்பனைக்க... மேலும் பார்க்க

பல்லடத்தில் இன்று உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது. உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் க... மேலும் பார்க்க