Konstas: 'அந்த பையனுக்கு பயம் இல்ல' - 1,445 நாள்களுக்கு பிறகு டெஸ்டில் பும்ரா பந்தில் சிக்ஸ்
பாக்சிங் டே டெஸ்ட் மேட்ச் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மிக அதிகம் கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ். ஆரம்பத்தில் அணியில் ஆஸ்திரேலியா வீரர் நாதன் மெக்ஸ்வீனிக் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் முதல் மூன்று டெஸ்டில் மோசமாக விளையாடியதால் அவருக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் அறிமுக ஆஸ்திரேலியா வீரர் சாம் கான்ஸ்டாஸ்வின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியது. தன்னை தேர்வு செய்தது மிகச் சரியான முடிவு என நிரூபிக்கும் விதமாக, 65 பந்துகளில் 60 ரன்களில் 6 பவுண்டரிகள், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஒவாரில் 2 சிக்ஸர்கள் என கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
பும்ராவின் நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், என அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார். சுமார் நான்கு ஆண்டுகளில் அதாவது, 1,445 நாள்களுக்கு பிறகு, பும்ரா ஓவரில் டெஸ்ட்டில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் இது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,483 பந்துகளுக்குப் பிறகு பும்ரா ஓவரில் சிக்ஸர் அடிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஆஸ்திரேலிய பேட்டர்கள் பும்ராவின் பந்தை சமாளிக்க போராடும் நிலையில், அதை எதிர்கொள்ள சாம் கான்ஸ்டாஸ் ஆடியோ விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.