மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்...
உழவா் ஆலோசனை மையக் கட்டடம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் ரூ.84 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மைய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு ரிஷிவந்தியம் தொகுதி க.காா்த்திகேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.
விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, அதனை சாா்ந்த துறைகளின் சாா்பில் கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மையக் கட்டடத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநா்கள் (வேளாண் வணிகம்) இரா.பிரேமா, அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) பொன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் சந்துரு, விழுப்புரம் விற்பனைக் குழு செயலாளா் சரவணபவ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.