செய்திகள் :

ஃபார்மில் இல்லாமல் இருந்தேனா? ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டி!

post image

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். எதிர்பாராத விதமாக பந்து ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின்மூலம் ஸ்மித் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள், பிஜிடி தொடரில் அதிக சதங்கள் என முதலிடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் டெஸ்ட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

அதிர்ஷடமும் நம்பிக்கையும் தேவை

சில நேரங்களில் பந்தினை நன்றாக அடித்தாலும் ரன்கள் குவிக்க முடியாது. ஆனாலும் நான் நன்றாகவே பேட்டிங் செய்வதாக உணர்வேன். ஃபார்மில் இல்லாமல் இருப்பதற்கும் ரன்கள் அடிக்காமல் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால், நான் நன்றாகவே விளையாடி வந்தேன். நான் சொல்லவருவது நமக்கு தேவை நம்பிக்கை. நீங்கள் முயற்சிபதன்மீது நம்பிக்கை வேண்டும்.

நீண்ட காலமாக விளையாடிவரும் எனக்கு உயர்வும் தாழ்வும் இருப்பது சாதாரணமானது.

இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவிக்க நமக்கு அதிர்ஷ்டம் தேவை. கடந்த வாரம் என்னால் முடிந்த அளவுக்கு ரன்கள் அடித்தேன். நான் பலமுறை நடுவர்களின் தீர்ப்புகளால் ஆட்டமிழந்துள்ளேன். அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நன்றாகவே விளையாடியுள்ளேன். அதனால்தான் சிறிது அதிர்ஷ்டம் தேவை எனக் கூறுகிறேன். ஆனால், இதெல்லாம் மாறுமென நீங்கள் நம்பவேண்டும்.

நானும் பாட் கம்மின்ஸும் விளையாடும்போது திட்டம் எதுவுமில்லை. அப்படியே சென்று விளையாடினோம். கம்மின்ஸ் சிறப்பாக விளையாடினார். மிகவும் நேர்மறையான நோக்கத்துடன் விளையாடினார். நாங்கள் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அதிலிருந்துதான் நாங்கள் ஆட்டத்தின் கணத்தினைப் பெற்றோம் என நினைக்கிறேன் என்றார்.

தீப்தி சா்மா அசத்தலில் இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி! ஒருநாள் தொடரில் மே.தீவுகள் ‘ஒயிட்வாஷ்’

வதோதரா: மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்... மேலும் பார்க்க

ஸ்மித் சதம்! ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்

மெல்போா்ன்: இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.சதம் கடந்த ஸ்டீவ் ஸ்மித்தின் சிறப்பான இன்னிங்ஸும், அவருக்குத் துணை நின்ற கேப்டன் ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போ... மேலும் பார்க்க

“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனது தேவையற்ற ரிஸ்க் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னி... மேலும் பார்க்க

ஃபார்மில் இல்லாத வீரர்களை நீக்குங்கள்! - முன்னாள் இந்திய கேப்டன்

ஃபார்மில் இல்லாத வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 90 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்க... மேலும் பார்க்க