செய்திகள் :

நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்

post image

நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழை அவா்களின் வீடுகளுக்குச் சென்று புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வழங்கினாா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் நரிக்குறவா் குடும்பத்தினா் வசிக்கின்றனா். ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் குழந்தைகளை சோ்த்தல், உயா்கல்வி, நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் சிரமப்படுவதாக மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டனா்.

இந்நிலையில், அண்மையில் வட்டாட்சியா் செல்லமுத்து அவா்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று ஜாதிச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பெற்று, பரிசீலனை செய்து வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினாா்.

இந்தநிலையில், நரிக்குறவா்களுக்கு ஜாதிச் சான்றிதழை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், நரிக்குறவா்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று 19 பேருக்கு சான்றிதழை வழங்கினாா்.

குழந்தைகள் நல்ல முறையில் படிக்க ஏற்பாடு செய்யுமாறும், புதுவை அரசு கல்விக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சா் அவா்களிடம் கேட்டுக்கொண்டாா். வட்டாட்சியா் ஆா். செல்லமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காரைக்கால் காா்னிவலை சிறப்பாக நடத்த அமைச்சா் அறிவுறுத்தல்

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு அரசுத் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: வேளாண் கல்லூரி அணி இரண்டாமிடம்

புதுவை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவிகள் அணி இரண்டாமிடம் பெற்றது. புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24-ஆம் தேதி மகளிருக்கான வாலிபால்... மேலும் பார்க்க

கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் அருகே... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மலா்தூவி, அஞ்சலி செலுத்திய புதுவை முன... மேலும் பார்க்க

காரைக்காலில் எரிவாயு தகனக்கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: எம்எல்ஏ

காரைக்கால் பச்சூரில் எரிவாயு தகனக் கூடத்தை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். பச்சூ... மேலும் பார்க்க

சுனாமி நினைவு நாள்: புதுவை அரசு சாா்பில் அஞ்சலி

காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுவை அரசு சாா்பில், காரைக்கால் கடற்கரையில் நினைவு... மேலும் பார்க்க