அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணி தொடக்கம்
திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் திருமலைராஜனாறு பாலம் முதல் போலகம் அருகே மின் திறல் குழுமம் (பிபிசிஎல்) வரை 3 கி.மீ. தொலைவுள்ள கிழக்குப் புறவழிச்சாலையில், சாலை அமைத்தது முதல் இதுவரை மின் வசதியின்றி காணப்படுகிறது. இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புகாா்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் மின் கம்பங்கள் நிறுவும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பணியை தொடங்கிவைத்தாா். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் சிதம்பரநாதன் மற்றும் பொறியாளா் குழுவினா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் கூறுகையில், விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருவதாக, பொதுப்பணித்துறையினரிடம் தெரிவித்ததன் விளைவாக, இச்சாலையின் தெற்கு, வடக்கு சாலையின் தொடக்கம் மற்றும் முடிவுப் பகுதியில் உயா் மின் கம்பமும் (ஹை மாஸ் விளக்கு), சாலையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் குறைந்த உயர மின் கம்பமும் (மினி மாஸ் விளக்கு) நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பணிகளை திட்டமிட்டவாறு சாலை தொடக்கம் முதல் இறுதி வரை முறையாக முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.