பாமக: 'விசுவாசத்தை ஓரம் கட்டிய சொந்தம்' - ராமதாஸ், அன்புமணி, மோதலுக்கு காரணமான ...
வாலிபால் போட்டி: வேளாண் கல்லூரி அணி இரண்டாமிடம்
புதுவை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவிகள் அணி இரண்டாமிடம் பெற்றது.
புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24-ஆம் தேதி மகளிருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. மாநிலத்தின் 15 கல்லூரிகளில் இருந்து அணிகள் கலந்துகொண்டன.
இதில், காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய அணியினா் 2-ஆம் பரிசுக்குத் தோ்வாகி கோப்பையை பெற்றனா். இரண்டாமிடம் பெற்ற அணியினா் கல்லூரி உடற்கல்வி பேராசிரியா் ஜெயசிவராஜனுடன், கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜை வியாழக்கிழமை சந்தித்தனா். மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்தாா். நிகழ்வில் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஆராமுதன் கலந்துகொண்டாா்.