``காங். எம்எல்ஏ-க்களே எதிராக பேசுவார்கள் என்ற பயத்தில் இப்படி செய்துள்ளனர்" -திமுகவை சாடும் தளவாய்

post image

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழும் வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை தொடர்ந்து 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அரசு அறிவித்ததால் விழா நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் எழுந்தது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

இந்நிலையில், பெரிய ஆடம்பரம் இன்றி விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அரசு அழைப்பிதழில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்.

`மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு' - தளவாய் சுந்தரம்

இதுகுறித்து தளவாய் சுந்தரம் கூறுகையில், "கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30-12-2024 முதல் 01-01-2025 வரை தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு ஐயன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தனர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல், திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல், அய்யன் திருவள்ளுவர் தோரண வாயில் அடிக்கல் நாட்டுதல் போன்ற பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்

விழா அழைப்பிதழில் பட்டிமன்றத்தில் உரையாற்றுபவர்களின் பெயர்கள் அரசு அதிகாரிகளின் பெயர்கள், கவிஞர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகின்ற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது.  இது மாவட்ட மக்களை அவமதிக்கின்ற செயலாகும். அரசு சார்பில் நடைபெறுகின்ற அனைத்து விழாக்களிலும் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறுவது நெறிமுறையாகும். இந்த நெறிமுறைகளுக்கு மாறாக முதலமைச்சர் பங்கேற்கின்ற அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறாமல் இருக்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகதான் இருக்கும் என கருதுகிறேன்.

`ஜனநாயகத்திற்கு விரோதமான நிலை..'

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பாராளுமன்ற தொகுதியும், ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டுமே தி.மு.க வசம் உள்ளது.  இதனை மனதில் கொண்டே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகளின் பெயர்களை வேண்டும் என்றே இடம் பெறாமல் செய்துள்ளார்கள் எனநினைக்கிறேன்.

சாதராணமாக நீதிமன்ற கட்டட திறப்பு விழாக்களில் மட்டுமே இது போன்ற நிலை இருந்து வருகிறது. அரசு சார்பில் நடைபெறுகின்ற இவ்விழாவில், இதுபோன்ற நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும். புரோட்டாக்காலை மீறி மக்கள் பிரதிநிதிகள்பெயர்கள் இடம் பெறாமல் விழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்

எதிர்காலத்திலும் இதனை முன்மாதிரியாகக்கொண்டு அரசு அழைப்பிதழ்களில்  மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம் பெறாமல் செய்வதற்கு வழி வகுக்கும். வரும் காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியில் இல்லாத பிற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அரசு அழைப்பிதழ்களில் இடம் பெறாமல் தவிர்க்க செய்கின்ற நிலை ஏற்பட்டு ஜனநாயகத்திற்கு விரோதமான நிலை ஏற்பட்டு விடும்.

தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எந்த வளர்ச்சித்திட்டமும் கொண்டுவரவில்லை. இப்போது இருக்கும் நிலையில் அது பற்றி முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே அரசுக்கு எதிராக பேசிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் பெயர் போடாமல் தவிர்த்திருக்கிறார்கள். திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக பேசினால் அது பெரிய விவாதத்தை ஏற்படுத்திவிடும் என பயப்படுகிறார்கள்" என்றார்.

Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

Doctor Vikatan:என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச்சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக... மேலும் பார்க்க

Fridge: ஃப்ரிட்ஜில் உணவுப் பொருள்கள்... தவிர்க்க வேண்டிய தவறுகள்; கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!

நம் வீட்டின் உணவு கஜானா என ஃப்ரிட்ஜை சொல்லலாம். தினசரி தேவைக்கான காய்கறி, பழங்களில் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு முன் வைத்த துவையல் முதல் நேற்று வைத்த வத்த குழம்பு வரை அனைத்தையும் அதற்குள் பார்க்கலாம். ... மேலும் பார்க்க

``பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை'' -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்- பதிவாளர் மோதல்!

ஒருவரை ஒருவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை...தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன். இருவருக்குமிடையே நடந்து வந்த ஈகோ யுத்தம் தற்போது வெளிச்சத்திற்கு... மேலும் பார்க்க

``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக நகர செயலாளர்!

மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கிட்டதட்ட ஒரு எம்.எல்.ஏ-வுக்கான தேர்தலை போல சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான சூழலில் நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெற்ற பொறுப்பாளர்களுக்கு பலரும்... மேலும் பார்க்க

Vijayakanth: விஜயகாந்த் நினைவு தினம்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரேமலதா; தலைவர்கள் அஞ்சலி!

நடிகரும், தே.மு.தி.க கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க தலைவரின் நினைவிடத்துக்கு கோயம்பேடிலிருந்து பேரணி செல்ல தே.மு.தி.க-... மேலும் பார்க்க

சொத்து விவரங்களை சமர்பித்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - ஆர்.டி.ஐ ஆர்வலர் பகிரும் தரவுகள்!

"தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை சொத்து விவரங்களை வெளிப்படுத்த தயங்கும் நிலையில் 310 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது பாராட்டும் வகையில் உள்ளது" என்கிறார... மேலும் பார்க்க