செய்திகள் :

South Korea: விமானம் விபத்து; 62 பேர் பலி... மீட்புப் பணிகள் தீவிரம்.. பதற வைக்கும் வீடியோ

post image
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்ககும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தச் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் '2216' வகை விமானம் ஒன்று, தாய்லாந்திலிருந்து கிளம்பி இன்று (டிச 29) காலை 9 மணி அளவில் தென் கொரியாவின் மூயான் (Muan) சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நிற்காமல் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்த அந்த விமானம், விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதி தீப்பற்றி வெடித்துள்ளது. இந்த விமானத்தில் 175 பேர் பயணிகளும், 6 விமான ஊழியர்களும் என மொத்தம் 181பேர் பயணித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத திடீர் விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. உயிரிழப்பின் எண்ணிக்கை 47 வரை அதிகரித்திருப்பதாக தற்போதையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பறவை மோதியதால் விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததுள்ளாதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விமான விபத்திற்கானக் காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்டுகள் வெளியாகவில்லை.

இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Trump: `முக்கியப் பொறுப்பில் தமிழர் நியமனம்' டிரம்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் எழும் குரல்... ஏன்?

'Make America Great Again' - அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் அதிகம் முழங்கிய ஒன்று. அமெரிக்காவில் அனைத்திலும் மற்ற நாட்டவர்களை விட, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதன் மைய... மேலும் பார்க்க

Kerala: 18 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த காங். எம்எல்ஏ உமா தாமஸ்... ஆபத்தான நிலையில் சிகிச்சை

கேரள மாநிலம் கொச்சி கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடிகை திவ்யா உண்ணி தலைமையில் 12,000 நடன மங்கையர் கலந்துகொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கேரள கல... மேலும் பார்க்க

Nallakannu: ``பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு; வழிகாட்டியாக தோழர் நல்லகண்ணு'' -மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.இவ்விழாவில் 'தோழர் நல்லக்கண்ணு நூறு' என்ற கவிதை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின... மேலும் பார்க்க

2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டையடி... |Photo Album

பிரசார களத்தில் மக்களுடன் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை - April 2024கோவை தொகுதி தி.மு.க வேட்பாளரை வரவேற்க கிரேன் உதவியுடன் கொண்டு வரப்பட்ட மாலை - April 2024 தாய் பூசத்தை முன்னிட்டு கோவை மருதமல... மேலும் பார்க்க

`பாதுகாப்பு இல்லை; மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் ஆதரவு’ - டிஜிபிக்கு ராஜினாமா கடிதம் எழுதிய காவலர்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் ஒருவர் தன்னை காவல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு எழுதிய ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருக... மேலும் பார்க்க

Manmohan Singh : `வரலாறு உங்களிடம் மிகக் கனிவாக இருக்கும்' - சென்று வாருங்கள் மன்மோகன் சிங்

நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிமன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில... மேலும் பார்க்க