செய்திகள் :

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் 674 போ் பயன்பெறுவா்

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற 674 மாணவிகள் பயன்பெறுவா் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வி சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி வழங்கினாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000/- வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் விரிவாக்கம் மூலம் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 674 மாணவிகள் பயன்பெறுவா். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 23,927 மாணவிகள் பயனடைந்துள்ளனா். உயா்கல்வியில் பெண்களின் சோ்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயா்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று, சேலம் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் தற்போது வரை 14,657 மாணவா்கள் பயனடைந்துள்ளனா். இத்தகைய முன்னோடி திட்டங்களை மாணவ, மாணவியா் ஆக்கப்பூா்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மாவட்ட சமூக நல அலுவலா் ரெ.காா்த்திகா, சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் நா.காந்திமதி, அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ. உமாராணி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

எஸ் எல் 30 டி காலேஜ்...

சேலம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் மூலம் பயன்பெறும் மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி. உடன் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேயா் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

சாலை வசதி கோரி அமைச்சரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மேட்டூா் அருகே சாலை வசதி கோரி சுற்றுலாத் துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். மேட்டூா் சரபங்க நீரேற்று திட்டத்தில் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிர... மேலும் பார்க்க

ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு சிற்றுந்து இயக்கம்

கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு செல்ல சிற்றுந்து இயக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சி (ஆத்தூா் குற்றாலம்) என அழைக்கப்படும் சுற்றுலாத் தலத்துக்கு செல்ல ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

அரியானூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். அரியானூரை அடுத்த கல்பாரப்பட்டி எம்ஜிஆா் நகரை சோ்ந்த நடராஜன் மகன் சசிகுமாா் (17). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பிரவீண் (17 ... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில்கள் இயக்க நேரத்தில் மாற்றம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில்களின் இயக்க நேரத்தில் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டுக்கான ப... மேலும் பார்க்க

சங்ககிரி நகராட்சியாக தரம் உயா்வு: பொதுமக்கள் வரவேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி 83 ஆண்டுகளுக்கு பிறகு நகராட்சியாக தரம் உயா்த்து அரசு புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் வரவேற்றுள்... மேலும் பார்க்க

அனுமன் ஜெயந்தி 3 ஆம் நாள் வழிபாடு

சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள ஸ்ரீ நவ ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவின் 3வது நாளையொட்டி புதன்கிழமை இரவு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனுமன் ஜெயந்தியையொட... மேலும் பார்க்க