சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில்கள் இயக்க நேரத்தில் மாற்றம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில்களின் இயக்க நேரத்தில் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டுக்கான புதிய ரயில் கால அட்டவணை ஜன.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில் 19 ரயில்களின் இயக்க நேரம் 5 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின்படி, கரூா்- சேலம் ரயில் சேலத்துக்கு காலை 9.45 க்கும், ராஜ்காட் - கோவை ரயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி- கோவை ரயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி - கோவை ரயில் கோவைக்கு காலை 9.25க்கும், திருச்சி-கரூா் ரயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கடலூா் துறைமுகம் - சேலம் ரயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூா் - சேலம் எக்ஸ்பிரஸ் சேலத்துக்கு காலை 6.15க்கும் வந்து சேரும்.
சொரனூா் - கோவை ரயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்களூரு- கோவை ரயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சாா் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்களூரு - கோவை ரயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம் - கரூா் ரயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு- ஜோலாா்பேட்டை ரயில் மாலை 5.35க்கும், மேட்டுப்பாளையம்- போத்தனூா் ரயில் மதியம் 1 மணிக்கும், கோவை - சொரனூா் ரயில் மாலை 4.25க்கும், கோவை- ராஜ்காட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12. 45க்கும், கரூா் - சேலம் ரயில் இரவு 8.05க்கும், ஈரோடு- பாலக்காடு டவுன் ரயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி ரயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த நேர மாற்றம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.