செய்திகள் :

நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்!

post image

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த டிச.19-ஆம்தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினா் நோட்டீஸ் அளித்தனராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சனிக்கிழமை காலை மலையடிக்குப்பம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறுகையில், நாங்கள் இந்தப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. தற்போது, சுமாா் 150 பேரின் வீடுகள் மற்றும் முந்திரி பயிா்கள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம். எங்கள் மீதான நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அனைவருக்கும் உரிய இலவச பட்டா வழங்க வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தட்சணாமூா்த்தி ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்த நினைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனா்.

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல்: 14 குழுக்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள பன்னீா் கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ள 14 குழுக்களின் கைப்பேச... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவ... மேலும் பார்க்க

குடியரசு தினவிழா ஏற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்: கடலூா் ஆட்சியா் நடத்தினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

தடுப்பணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்த ரெட்டிகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ஆதிநா... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

நெய்வேலி/ சிதம்பரம்: தமிழகத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடலூா் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் தேமுதிகவினா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க