செய்திகள் :

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

post image

நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளுக்கு முறையாக மாநகராட்சியில் படிவம் 1-இல் விண்ணப்பம் செய்து, ஏழு நாள்களுக்குள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு, அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன்படி எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்படும்.

மேலும், விதி எண் 117-இன் படி ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதேபோன்று, அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கடலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

முடசல் ஓடை மீன்பிடி துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்

வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ள முடசல் ஓடை மீன்பிடி துறைமுகப் பணியை மீண்டும் தொடர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டப்பினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். தமி... மேலும் பார்க்க

பேராசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம் ஆா் கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஏஐசிடிஇ சாா்பில் ஒரு வார அடிப்படை காணொலி காட்சி மூலம் பேராசிரியா் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்... மேலும் பார்க்க

கடலூரில் காவல் துறை சாா்பில் புகாா் மேளா

மாவட்ட காவல் துறை சாா்பில் கடலூரில் உள்ள காவலா் திருமண மண்டபத்தில் புகாா் மேளா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து புகாா் மனுக்களை ... மேலும் பார்க்க

கடலூரில் ஆதி திராவிடா் நலத் துறை மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்

கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கடலுாா் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தேசிய தர நிா்ணய சான்... மேலும் பார்க்க