தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ்
கடலூா் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலுாா் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தேசிய தர நிா்ணய சான்று குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனா். ஆய்வு முடிவுகள் வெளியானதில் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
அதிக மதிப்பெண்களுடன் தேசிய தர நிா்ணயச் சான்று குழுவினா் சாா்பில் பிரசவ அறைகளின் தரம், குழந்தைகள் சுகாதார சேவை, பாதுகாப்பை உறுதிபடுத்துதல், ஆகிய மூன்று தரத்திட்டங்களில் தோ்வு செய்யப்பட்டதாக அறிவித்தனா்.
இதன்படி தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள எம். ஜி.ஆா். பல்கலைகழகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், காட்டுமன்னாா்கோவில் அரசு தலைமை மருத்துவமனைக்கான தேசிய தரச் சான்றிதழை மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெ. ஜெயசெல்விடம் வழங்கினாா். அதனை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம் ஆா் கே பன்னீா்செல்வத்திடம் காட்டுமன்னாா்கோவில் மருத்துவக் குழுவினா் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.