தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
கடலூரில் ஆதி திராவிடா் நலத் துறை மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்
கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கூறியது: கடலூா் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தினக்கூலி பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் விவரம் குறித்து கணக்கீடு செய்து அவா்களுக்கான கையுறை, முகக்கவசம், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, மழை கோட்டு, கம்பூட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் குழந்தைகளில் 279 மாணவா்களுக்கு ரூ.3,83,200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
2024- 2025-இல் ஆதிதிராவிடா் நலப் பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தாட்கோ மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ளவா்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கூடுதல் மானியம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு போன்ற போட்டித்தோ்வுகளுக்கு பயிற்சி அளிககப்பட்டு வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் விடுதி மாணவா்களுக்கு வாரத்தின் ஐந்து நாள்களிலும் மாலை நேரங்களில் நா்ஸ்ரீண்ஹப் கஹக்ஷ மூலம் கலை, அறிவியல், ஆங்கில பயிற்சி உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் போட்டித் தோ்வுகள் குறித்த வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.