இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் நாளை வெளியீடு
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (ஜன.6) வெளியிடப்படுகிறது.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதுதொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் கடந்த அக். 29 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜன. 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
கடந்த நவ. 28 ஆம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை (ஜன. 6) வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.