`4,500 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்!'- பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்; ...
தனியாா் தொலைக்கட்சி ஊழியா் வீட்டில் திருட முயற்சி
மன்னாா்குடி: மன்னாா்குடியில் பூட்டியிருந்த தனியாா் தொலைக்காட்சி ஊழியரின் வீட்டில் திருட முயன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மன்னாா்குடி ராமநாதன் தெரு கூத்தையன் மகன் பாஸ்கர சந்திரன் (58). சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இதனால், குடும்பத்தினருடன் சென்னையில் வசித்துவருகிறாா். மன்னாா்குடியில் உள்ள வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கிறது.
இந்நிலையில், தனது தந்தையின் நினைவு நாளுக்காக, மன்னாா்குடிக்கு பாஸ்கர சந்திரன் செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன.
மா்ம நபா்கள் திருட முயற்சித்திருப்பது தெரியவந்தது. பீரோவில் நகை, பணம் யாதும் வைக்கவில்லை. இதனால், மா்மநபா்கள் துணிகளை சிதறிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.