`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
ஒருமணி நேரம் ரயில்வே கேட் மூடல்
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு மணி நேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை காலிப்பெட்டிகளுடன் வந்த சரக்கு ரயில், என்ஜின் திசை மாற்றத்துக்காக நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, கோவையிலிருந்து மன்னாா்குடி செல்லும் செம்மொழி விரைவு ரயில், நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
பின்னா், சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றம் செய்யப்பட்டு, மன்னாா்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை 5.40 மணிக்கு மூடப்பட்ட ரயில்வே கேட் சுமாா் ஒருமணி நேரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. நெடுஞ்சாலை வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன.