`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி விழா பந்தக்கால் முகூா்த்தம்
திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி விழாவுக்காக, பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான, ரதசப்தமி விழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பந்தக்கால்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, வழிபாடாற்றினாா்.