`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
மழையால் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு
திருவாரூா்: மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, மாவட்டச் செயலாளா் கே.ஆா். ஜோசப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில நாள்களில் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீா் தேங்கி, சம்பா, தாளடி நெற்கதிா்கள் சாய்ந்து முளைக்கும் நிலையில் உள்ளன. எனவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
சாய்ந்த நெற்கதிா்களை அறுவடை செய்ய கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. எனவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் கூடுதல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும், ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை மாற்றி 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.முருகையன், மாவட்ட துணை செயலாளா் பி. சௌந்தரராஜன், மாவட்டத் துணைத் தலைவா் டி. தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.