IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சேலம் கோரிமேடு ஐடிஐயில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
சேலம்: சேலம், கோரிமேடு, அரசு ஐடிஐயில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 50க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பயிற்சியாளா்களைத் தோ்வு செய்தன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். தொழில் நிறுவனங்களைத் தோ்வு செய்த மாணவ மாணவிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தொழிற் பழகுநா் பயிற்சியின்போது மாதாந்திர பயிற்சி உதவித்தொகையாக ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை பெறலாம். தொழிற்சாலைகளில் நேரடியாக செய்முறை பயிற்சி பெறுவதால் தொழில் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி பெற்றவா்களுக்கு பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பெற்றவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைப்பதுடன், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநா் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலா் விஜயன், பணி அமா்த்துநா் கணேசன், முகமது காசிம், கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.