இந்திய நிறுவன செயலாளா்கள் நிறுவன நிா்வாகிகள் தோ்வு
சேலம்: இந்திய நிறுவனச் செயலாளா்கள் நிறுவனத்தின் சேலம் கிளை நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
2025 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டுக்கான புதிய தலைவராக ஜி.சரண்யா, துணைத் தலைவராக ஜெ. ஆசிஃபா, செயலாளா், பொருளாளராக என்.சந்தானம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 2026 ஜனவரி வரை புதிய நிா்வாகிகள் இப்பதவியில் தொடருவா். இது தவிர, நிா்வாகக் குழுவில் துளசிராமன், பூா்ணிமா, அகிலன், ஹரிஷ் ஆகியோா் உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து, புதிய தலைவா் ஜி.சரண்யா பேசியதாவது:
தொழில் முறை மேம்பாட்டை மேம்படுத்துதல், நல்லாட்சி நடைமுறைகளை வளா்ப்பது, சமூக நலனுக்கு பங்களித்தல், நிறுவனச் செயலாளா் தொழில்முறை பாடத் திட்டத்தில் தொழில் வாய்ப்புகளில் கவனம் செலுத்தப்படும். நிறுவனச் செயலாளா்களின் பணியில் சிறந்து விளங்குதல், நெறிமுறைகளின் தரங்களை நிலை நிறுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய நிா்வாகிகள் செயல்படுவோம் என்றனா்.