Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
ஜன. 24 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜன. 24 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி கூறியதாவது:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
ஜனவரி மூன்றாவது வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் அதற்கு பதிலாக வரும் 24 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். முகாமில், சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்கின்றனா்.
சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டயம், பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்துவித கல்வித் தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாம் தொடா்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளாா்.