NEEK : "எப்படி இந்தப் படத்தை எடுத்தீர்கள்..." - தனுஷ் பற்றி வியந்த SJ சூர்யா!
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்தரன், பவிஷ், ரபியா, வெங்கடேஷ் மேனன், சித்தார்த் சங்கர், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் கோல்டன் ஸ்பாரோ, ஏடி, காதல் ஃபெயில் ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
"நமது சர்வதேச நடிகர், இயக்குநர் தனுஷ் உடன் NEEK திரைப்படத்தைப் பார்க்கும் சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு பொழுதுபோக்கான, இளம் ஜென்Z, வேடிக்கையான அதே வேளையில் எமோஷனலான தனித்துவமான திரைப்படம்.
ஒரு கேள்வி சார்(தனுஷ்), உங்களது நெருக்கடியான வேலைகளுக்கு நடுவில் எப்படி இந்த களிப்பான படத்தை எடுத்தீர்கள், அதுவும் ராயன் முடிந்த உடனேயே?
என்ன ஒரு இயக்கம்... படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகள். இந்த படத்தில் அறிமுகமாகியுள்ள, நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளீர்கள்" என எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "நேரம் எடுத்து எங்கள் திரைப்படத்தைப் பார்த்ததற்கு மிக்க நன்றி சார். உங்களுக்கு படம் பிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி, எங்கள் குழு உங்களது ரியாக்ஷனால் மிகவும் உற்சாகமடைந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார் தனுஷ்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் திரைப்படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவிருந்தது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் நடந்த மாற்றங்களால் பிப்ரவரி 21ம் தேதிக்கு வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.