செய்திகள் :

கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர்

post image

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது: 52). இவருக்கு தமிழரசி (வயது: 42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (வயது: 24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி, ’சிகரெட் இல்லை’ என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பிறகு, சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, காலி குவார்ட்டர் பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசி உள்ளார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.

கடைக்குள் வீசப்பட்ட குண்டு

அதனைத் தொடர்ந்து, மண்ணெண்ணெய் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால், முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீஸார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடினர். இந்நிலையில், கொளந்தாகவுண்டனுர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கியிருந்த முகமது அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். அப்போது, அவர் தப்பிக்க முயன்று ஓடியபோது தடுமாறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர்மீது கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 10 - க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. சிகரெட் இல்லை என்றதால், இளைஞர் ஒருவர் மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டை வீசிய சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: விபரீதத்தில் முடிந்த பிராங்க்; தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது!

திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. மகன் சத்யநாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி... மேலும் பார்க்க

கொடைக்கானல்: வேரோடு கஞ்சா செடி விற்பனை; போதையில் மாட்டிய கல்லூரி மாணவர்; நடந்தது என்ன?

கொடைக்கானலில் போதைக்காளான், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதாகப் புகார் உள்ளது.இந்நிலையில் கொடைக்கானலில் கஞ்சா செடியை வளர்த்து வேரோடு பறித்து விற்பனைக்குக் கொண்டு சென்றதாக இளைஞர் ... மேலும் பார்க்க

சாத்தூர் செவிலியர் பாலியல் புகார்; மாவட்ட எஸ்பி பதிலளிக்க எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக ரகுவீர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023-ல் குழந்தைகள் நல வ... மேலும் பார்க்க

`ரூ.280 கோடி மதிப்புள்ள 39 சிலைகள்; வெளிநாட்டிலிருந்து மீட்க வேண்டும்' - பொன் மாணிக்கவேல்

தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். ஓய்வுக்குப் பிறகும் சாமி சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து, வெளிநாட்டில... மேலும் பார்க்க

"விசாரணையை தவறான பாதையில் கொண்டுசெல்ல முயன்ற கிரீஷ்மா" - இருந்தும் நீதி கிடைத்தது எப்படி?

கேரள மாநிலம் பாறசாலை ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை நிரூபித்த போலீஸாருக்க... மேலும் பார்க்க

காதலனுக்கு கஷாயத்தில் விஷம்; காதலி கிரீஷ்மாவுக்கு சாகும்வரை தூக்கு - தண்டனை விவரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜிக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் கன்னியாகுமரி ... மேலும் பார்க்க